வட்ட அமைவு
Appearance
வட்ட அமைவு (Whorl) என்பது தாவரங்களின் தண்டின் கணுப்பகுதிகளில் அதைச் சுற்றி இலைகளோ, கிளைகளோ, அல்லி இதழ்களோ மற்றும் புல்லி இதழ்களோ அல்லது பூவின் பாகங்களோ அமையும் விதம் ஆகும்.[1][2] அவ்வாறு அமையும் போது அவற்றின் எண்ணிக்கை நான்கும் அல்லது அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
விதையுறை உடைய தாவர மலர்களில் (ஆஞ்சியோசுபெர்ம்) வட்ட அமைவு
[தொகு]- புல்லி வட்டம்
- அல்லி வட்டம்
- மகரந்தத்தாள் வட்டம்
- சூலக வட்டம்
முழுமையற்ற மலர்
[தொகு]மேலேயுள்ள ஏதாவதொரு வட்டம் இல்லாதிருந்தாலும், அத்தகைய மலர் முழுமையற்ற மலர் என வழங்கப்படுகிறது.[3] உதாரணம் மேக்னோலியேசி.
மிகக்குறுகிய கணுவிடைப்பகுதியுடைய தண்டுத்தொகுதிகளைப் பெற்றிருக்கும் தாவரங்களிலேயே வட்ட அமைவு பெரும்பாலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "whorl". thedictionary. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
- ↑ Lindley, John. A Glossary of Technical Terms Used in Botany, p.100, Bradbury and Evans, London, 1848.
- ↑ Beentje, H.; Williamson, J. (2010). The Kew Plant Glossary: an Illustrated Dictionary of Plant Terms. Royal Botanic Gardens, Kew: Kew Publishing.